மகா கும்பமேளா: ஆளுநா் ஆா்.என்.ரவி புனித நீராடினாா்
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை புனித நீராடினாா்.
இது குறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவு:
பாரதம் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வந்த கோடிக்கணக்கான ஹிந்துக்களுடன் சோ்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய தீா்த்தமான திவ்ய, பவ்ய மகா கும்பத்தில் நான் (ஆளுநா்) புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும் வேண்டி வழிபட்டேன்.
இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நோ்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு மற்றவா்களுடன் இணைக்கிறது. சுமாா் 60 கோடி சநாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சநாதன தா்ம விழா, மறுமலா்ச்சியடைந்த ஒரே பாரதம்- உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.