செய்திகள் :

மகா கும்பமேளா: 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!

post image

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா்.

மெளனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாள்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜிற்கு வருகைப் புரிந்தனர். மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடினா்.

அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.

காங்கோவில் 2வது விமான நிலையத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிப்படை?

பிப்.26 மகா சிவராத்திரி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வெவ்வேறு நாள்களில் புனித நீராடினர்.

இந்த நிலையில் கும்பமேளாவில் வெள்ளிக்கிழமை மாலை வரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

மேலும் வெள்ளிக்கிழமை மட்டும் 92 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் நீராடியுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவளம் கடலில் அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலி

கோவளம் கடலில் 75 வயது அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலியானதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.விழிஞ்சம் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நண்பர்களுடன் விடுமுறைக்கு வந்திருந்த பெண், க... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு கிட... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் காசி ... மேலும் பார்க்க

ராகுல் காந்தியுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தியுடன் அவர் விவாதித்ததாக அதிகாரப்ப... மேலும் பார்க்க

கும்பமேளாவில் நீராடிய மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான்!

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான் தனது குடும்பத்தினருடன் நீராடினார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் நகரில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் இரண்டு பாதசாரிகள் பலியானதாக காவல்துறை அதிகாரி... மேலும் பார்க்க