செய்திகள் :

மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா: தமிழிசை உருக்கம்

post image

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானாா்.

வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் காலமானாா்.

மறைந்த குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது மகளும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான டாக்டா் தமிழிசை செளந்தரராஜனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு இரண்டர கலந்துவிட்டார்...

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்!

குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்... அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக... தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு... தமிழிசை என்ற பெயர் வைத்து... இசை இசை... என்று கூப்பிடும் என் அப்பாவின்... கணீர் குரல்... இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது....

வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று... சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்... இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்... சீராக வாழ்வதைக் கண்டு... பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்... என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும்.

தமிழக அரசியலில்.. நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.... மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ... அதை மனதில் கொண்டு... உங்கள் பெயரில்... நாங்கள் செய்வோம் என்று... உறுதியோடு... உங்களை வழி அனுப்புகிறோம்.

உங்கள் வழி உங்கள் வழியில்...... நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல... நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்... போய் வாருங்கள் அப்பா.

தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்... நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க