செய்திகள் :

மக்கள் ஆதரவில் பெருசு திரைப்படம்..!

post image

அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெருசு’.

இப்படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.

மரணப்படுக்கையில் இருந்த குடும்ப பெரியவரின் இறப்பில் நேரும் ஒரு சம்பவம் குறித்த துயர நகைச்சுவைக் கதையாக ’அடல்ட் காமெடி’ பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் மார்ச் 14 அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

சமீபத்தில் படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது. வைபவ்-க்கு இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் 2ஆவது வாரத்திலும் 150க்கும் அதிகமான திரைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பாடைக்காவடி திருவிழா!

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வலங்கைமான் வரதராஜம்பேட்டை தெருவில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்... மேலும் பார்க்க

கண்மணி - அஷ்வத் தம்பதி அறிவித்த மகிழ்ச்சி செய்தி!

சின்ன திரை பிரபலங்களான கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதி தாங்கள் பெற்றோராகப் போவதாக அறிவித்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்... மேலும் பார்க்க

நிதானம் தேவை இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.23-03-2025ஞாயிற்றுக்கிழமைமேஷம்:இன்று வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்ட... மேலும் பார்க்க

தனுஷ் - அஜித் கூட்டணி! தயாரிப்பாளர் சொன்னது என்ன?

நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்கும் முயற்சியில் நடிகர் தனுஷ் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் அரிதாகவே உச்ச நட்சத்திரங்களின் கூட்டணி இணைகிறது. பெரும்பாலும் ஒரே படத்தில் சம அளவ... மேலும் பார்க்க