செய்திகள் :

``மக்கள் பிரச்னைகளை நடிகர் விஜய் பேசுவது வரவேற்கத்தக்கது..!" - காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

post image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 7 வாரங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. ரூ.58 கோடி நிலுவை பணம் உள்ளது. இதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். மத்திய அரசு நுாறு நாள் வேலை திட்டத்தை முடக்கும் பணியை செய்கிறது. தெருநாய் பிரச்னை அதிகளவில் உள்ளது. மத்திய அரசின் எஸ்.ஓ.பி., வழிகாட்டுதல் இருப்பதால் நாய்களை கட்டுப்படுத்துவதில் நிறைய விஷயங்களை செய்ய முடியவில்லை. பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தில் நிறைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், மக்கள் பிரச்னைகளை பற்றி பேசுவது வரவேற்கதக்கது. விமான நிலையம் அமைப்பதற்கு மாநில அரசு நான்கு இடங்களை தேர்வு செய்தது. அதிலிருந்து 2 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்தது. இங்கு அரசியல் செய்வதை விட தமிழக வளர்ச்சியை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கவேண்டும். நடிகர் விஜய் பா.ஜ.க,வை எதிர்த்ததால் 'இண்டியா' கூட்டணிக்கு அழைத்தோம். நாம் தமிழர் சீமான், பெரியார் குறித்து அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

`சின்ன பையன்... நேற்று முளைத்தவன் எல்லாம் பேசுகிறான்'- விஜய்யை கடுமையாக தாக்கி பேசிய ஆர்.எஸ்.பாரதி

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தவெக தலைவர் விஜய் ஜனவரி 20 ஆம் தேதி போராட்டத்தை நடத்தி இருந்தார். போராட்டத்தின் போது, "உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். ம... மேலும் பார்க்க

வருண்குமார் - சீமான் வழக்கு: திருச்சி நீதிமன்றத்த்தில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்!

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி சாட்டை துரைமுருகன் கடந்த வருடம் கைது செய்யப்பட்டபோது அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த சில ஆடியோக்கள் ‘லீக்’ ஆனது. சாட்டை துரைமுருகனுடன் பேசிய சீமான், மூத... மேலும் பார்க்க

பெரியார்: ``ஹோல்சேல் டீலரே பேசமால் இருக்கும்போது பெட்டிக்கடைக்காரர்கள்" - சீமான் காட்டம்

தந்தைப் பெரியார் குறித்து தொடர்ந்து சர்ச்சையான கருத்து தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``பெரியார் பே... மேலும் பார்க்க

`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனிவாசன் கேள்வி

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருவள்ளுவரையும், வள்ளலாரையும் வேறு யாரோ களவாட முயற்சிக்கிறார்கள... மேலும் பார்க்க

பரந்தூர் : `பண்ணூரை விட பரந்தூரில் குடும்பங்கள் குறைவு..!" - தமிழக அரசு கூறுவதென்ன?

பரந்தூர் விமான நிலைய சர்ச்சைகாஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதே நேரம் இங்கு விமான நிலையம் வேண்டாம் என 13 கிராம மக்கள் 900 நாள்களைக் ... மேலும் பார்க்க