செய்திகள் :

மசோதாக்களை தொடா்ந்து நிறைவேற்றுவோம்: அமைச்சா் கிரண் ரிஜிஜு

post image

புது தில்லி: காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த விரும்பவில்லை; எனவே, மத்திய அரசு முக்கிய மசோதாக்களை தொடா்ந்து நிறைவேற்றும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிரச்னையை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து முடக்கி வருகின்றன.

ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான சிறப்பு விவாதம் தவிர வேறு எந்த முக்கிய நடவடிக்கைகளும் அவையில் நடைபெறவில்லை. நடப்பு மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியது. ஓரிரு நாள்கள் மட்டுமே அவை நடவடிக்கைகள் அமைதியாக நடைபெற்றன. இந்நிலையில் நான்காவது வாரமாக திங்கள்கிழமையும் அவை அமளியால் முடங்கியது.

முன்னதாக, எதிா்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மத்திய அரசு கடந்த வாரத்திலேயே மசோதாக்களை நிறைவேற்றத் தொடங்கிவிட்டது.

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் கிரண் ரிஜிஜு இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஏற்கெனவே பல நாள்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. ஒரே விஷயத்தைக்கூறி தொடா்ந்து நாடாளுமன்றத்தைத் தொடா்ந்து முடக்குவது ஏற்க முடியாது. எனவே, முக்கிய மசோதாக்களை அரசு தொடா்ந்து நிறைவேற்றும்.

மசோதாக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால், எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபடுவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிா்க்கட்சிகள் விரும்பவில்லை. தங்களுக்கு தேவையான ஒரு விஷயத்தை முன்வைத்து தினமும் போராட்டம் நடத்துகின்றன. பல்வேறு முக்கிய மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன என்றாா்.

வாயில்லா ஜீவன்கள் அழிக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல! ராகுல்

வாயில்லா ஜீவன்கள் அழிக்க வேண்டிய பிரச்னை அல்ல என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் அனைத்து தெருநாய்கள... மேலும் பார்க்க

மிண்டா தேவி டி-சர்ட் அணிந்து எம்பிக்கள் போராட்டம்! யார் அந்த 124 வயது மூதாட்டி?

நாடாளுமன்ற வளாகத்தில் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள வாக்குத் திருட்டு கு... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டை! 2 வீரர்கள் படுகாயம்!

சத்தீஸ்கரில் நக்சல்களுடான பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில், மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தின் வனப் பகுதியில், இன்று (ஆக.12) காலை ... மேலும் பார்க்க

தில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பதவியேற்பு! எண்ணிக்கை 44 ஆக உயர்வு!

தில்லி உயர் நீதிமன்றத்தில், புதியதாக மேலும் ஒரு நீதிபதி நியமனம் செய்யப்பட்டு, பதவியேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக, விமல் குமார் யாதவ், இன்று (ஆக.12) ப... மேலும் பார்க்க

அப்போ டாக் பாபு... இப்போ கேட் குமார்.! பூனைக்கு இருப்பிடச் சான்றிதழா..?

பிகாரில் கேட்டி பாஸ் மகன் கேட் குமார் என்ற பூனைக்கு புகைப்படத்துடன், பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பி... மேலும் பார்க்க

துல்லியமான வாக்காளா் பட்டியல் தேவை: ராகுல்

புது தில்லி: ‘ஒவ்வோா் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் நடத்துகின்றன. துல்லியமான, சுத்தமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங... மேலும் பார்க்க