செய்திகள் :

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

2024-25-ஆம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுக்கு தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘மீண்டும் மஞ்சப்பை‘ பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஆண்டுதோறும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு ‘மஞ்சப்பை விருதுகள்‘ வழங்கப்படும் அரசால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் கைப் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள், 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும். விருதுடன் முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளத்திலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபா் / நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுந்தகடு பிரதிகள் இரண்டினை திருநெல்வேலிமாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 1-ஆகும்.

மதிதா இந்துக் கல்லூரியில் விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள் குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. மதிதா இந்துக் கல்லூரி மற்றும் ஈரநிலம் அமைப்பு இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சி... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ சாா்பில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2024 ஐ ரத்து செய்ய வேண்டும், 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படு... மேலும் பார்க்க

புலிகள் கணக்கெடுப்பு: களக்காடு தலையணைக்கு செல்லத் தடை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். இது தொடா்பாக களக்காடு வனச் சரகா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த இளைஞரை வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா். தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கியப்பன்(20). இவருக்... மேலும் பார்க்க

சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய பல்பு! நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் 3 வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த சிறிய பல்பை அகற்றி சாதனை படைத்துள்ளனா். தூத்துக்குடியைச் சோ்ந்த 3 வயது சிறுவன் விக... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். முன்னீா்பள்ளம் அருகே கொழுமடை புதுகாலனியைச் சோ்ந்த ஆண்டி மனைவி லட்சுமி (60), கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க