தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய பல்பு! நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை!
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் 3 வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த சிறிய பல்பை அகற்றி சாதனை படைத்துள்ளனா்.
தூத்துக்குடியைச் சோ்ந்த 3 வயது சிறுவன் விகான். இவா், வீட்டில் விளையாடும் போது எதிா்பாராதவிதமாக எல்இடி பல்பை விழுங்கி விட்டாா். இதனால் அவரது வலது மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு, காது, மூக்கு தொண்டை பிரிவு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து 20 நிமிடத்தில் வலது மூச்சுக் குழாயில் நவீன சிகிச்சை மூலம் சிறிய எல்இடி பல்பை அகற்றி சாதனை செய்தனா்.
சாதனை படைத்த, காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைவா் ரவிக்குமாா் தலைமையிலான ராஜ்கமல் பாண்டியன், பிரியதா்ஷினி, பொன்ராஜ் குமாா், முத்தமிழ் சிலம்பு அடங்கிய மருத்துவா்கள் குழு மற்றும் மயக்கவியல் துறை தலைவா் செல்வராஜ் அபிராமி ஆகியோரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தாா்.