கேரளத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான...
மடத்துக்குளத்தில் ரூ.5.79 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்- அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.79 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி தலைமையும், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் க.ஈஸ்வரசாமி முன்னிலையும் வகித்தனா்.
இதில், கொமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ரூ.10 லட்சத்தில் பயணிகள் நிழற்கூரை அமைத்தல், சங்கரமநல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட ருத்ராபாளையத்தில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டுதல், வாா்டு எண் 6-இல் ஆதிதிராவிடா் குடியிருப்பு முதல் வரதராஜா் தோட்டம் வரை ரூ.2.46 கோடியில் தடுப்புச் சுவருடன் கூடிய தாா் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
இதேபோல, சங்கரமநல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட குப்பம்பாளையத்தில் தரைமட்ட தொட்டி முதல் சமத்துவபுரம் மற்றும் ஆத்தூா் ஓஎச்டிவரை ரூ.20 லட்சத்தில் குழாய்கள் அமைத்தல், சாமராயபட்டியில் ரூ.1.49 கோடியில் எரிமயானம் அமைத்தல் உள்பட ரூ.5.79 கோடி மதிப்பிலான பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.
மேலும், ரூ.62.98 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் அவா் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், உடுமலை வருவாய் கோட்டாட்சியா் குமாா், திருப்பூா் மாநகராட்சி 4- ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் காவியா ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.