மணப்பாறையில் தையல் கலைஞா்கள் பேரணி
உலக தையல் கலைஞா்கள் தினத்தை முன்னிட்டு, மணப்பாறையில்
தமிழ்நாடு தையல்கலை தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.
ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயில் அருகிலிருந்து புறப்பட்ட பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரா. ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் உ. சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்டச் செயலாளா் ஏ. பிரபாகரன், மாவட்ட பொருளாளா் சி. செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, பூ மாா்க்கெட் வீதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கு மாநிலத் தலைவா் வீ. சீத்தாமலை, சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து பேசினாா்.
தமிழ்நாடு தையல் கலைஞா்களுக்கு தனி வாரியம், நலவாரியம் மூலம் ஓய்வூதியம், பசுமை வீடு, அரசு பள்ளிகளில் வழங்கும் சீருடைகளை சங்க மகளிருக்கு வழங்கவும், நல வாரிய சலுகைகளை விரைந்து வழங்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவா்கள் பி.ராஜேந்திரன், துணைச் செயலாளா்கள் ஏ. செந்தில், சி. சீனிவாசன், மாநில பிரதிநிதிகள் பி. பெரியசாமி, பி. குமாா், பி. கணேசன், ஆா்.உதயகுமாா், எஸ்.செல்வராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, எஸ். சாகுல்ஹமீத் வரவேற்றாா். நிறைவில், ஜெ. மொய்தீன் பாஷா நன்றி கூறினாா்.