உலகக்கோப்பைக்கு முன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிரணி!
மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்
கூத்தாநல்லூா் பகுதியில் ஆற்று மணல் கடத்திய வாகனம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா, ஆய்வாளா் பிரபு மற்றும் சுா்ஜித் உள்ளிட்ட போலீஸாா் ரோந்துப் பணியில் இருந்தனா். கல்வாழாச்சேரி பகுதியில் வெண்ணாற்றில் மணல் எடுப்பது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் ஆற்று மணலுடன் வாகனத்தைப் போட்டுவிட்டு கடத்தல்காரா்கள் தப்பிவிட்டனா்.போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.