செய்திகள் :

மணிப்பூரில் தொடரும் வன்முறை: 2 போலீஸார் காயம்!

post image

மணிப்புரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர் கனன் சிங் மற்றும் நால்வரை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் 2 காவலர் காயமடைந்தனர்.

அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர்களின் ஒருவரான கனன் சிங்கை இம்பால் விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இம்பால் பள்ளத்தாக்கின் பல மாவட்டங்களில் தடை உத்தரவுகளை மீறி போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இரவு இம்பால் கிழக்கு மாவட்டத்தின் குராய் லாம்லாம் பகுதியில் மோதல்கள் வெடித்தன. கூட்டத்தைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் பல முறை கண்ணீர்ப் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர்.

மேலும் போராட்டக்காரர்கள் நான்கு சக்கர வாகனம் ஒன்றும் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தௌபல், காக்சிங் மாவட்டங்களிலும் சாலைத் தடுப்புகள் மற்றும் டயர்களை எரித்து போராட்டங்கள் நடைபெற்றன.

திங்கள்கிழமை மாலை இம்பால் மேற்கு மாவட்டத்தின் தேரா பகுதியிலும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பதற்றம் ஏற்பட்டது.

விஷ்ணுபூர் மாவட்டத்தின் நம்போலில், போராட்டக்காரர்களுடனான மோதலின்போது குறைந்தது இரண்டு காவல்துறையினருக்கு காயங்கள் ஏற்பட்டன.

பதற்றத்திற்கு மத்தியில், இன்று காலை இம்பாலில் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வருகின்றனர்.

மணிப்பூரில் 2023, மே மாதம் மைதேயி-குகி சமூகங்களிடையே மோதல் நீடித்து வருகிறது. இதில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறை தொடங்கியபோது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி கனன் சிங்கை சிபிஐ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மாணவர் விடுதி மீது விழுந்த விமானம்! மருத்துவர்களின் நிலை?

குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. விமானம் விழுந்தபோது, கட்டடமும் தீப்பற்றி எரிந்ததாகவும், இதனால், அதில் இருந்த மருத்துவர்களின... மேலும் பார்க்க

ஆமதாபாத்தில் இருந்து 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஆமதாபாத் விமான நிலையத்தில் தற்காலிகமாக சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.ஆமதாபாத்தில் இருந்து லண்டன்... மேலும் பார்க்க

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயம் நொறுங்கியது! - பிரதமர் மோடி

ஆமதாபாத் விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனையைத் தருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் ... மேலும் பார்க்க

விமான விபத்து வேதனை அளிக்கிறது! பிரிட்டன் பிரதமர் வேதனை!

ஆமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக பிரட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் பதிவிட்டுள்ளார்.குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புறப்ப... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து! கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? விடியோ

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் இன்று பகல் 1.43 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமானம் ஆமதாபாத் சர்தார் வல்லபபாய் படேல் சர... மேலும் பார்க்க

விமான விபத்து: மத்திய அரசின் உதவி எண்கள் அறிவிப்பு!

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில் மத்திய அரசின் உதவி எண்களை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.17-க்கு லண்டன் புறப்பட... மேலும் பார்க்க