செய்திகள் :

Ahmedabad Plane Crash: '169 இந்தியர்கள், 53 பிரிட்டீஷார்...' - ஏர் இந்தியா சொல்லும் எண்ணிக்கை என்ன?

post image

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

இந்த விபத்து சம்பந்தமாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

Ahmedabad Airplane Crash
Ahmedabad Airplane Crash

ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் பதிவில், "அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து Take Off ஆன AI 171 என்ற எண் கொண்ட விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது.

விபத்துக்குள்ளான அந்த விமானம் மதியம் 1:38 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. போயிங் 787-8 ரக அந்த விமானத்தில் விமானக் குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருந்தனர்.

அதில் 169 இந்தியர்களும் பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுக்கலைச் சேர்ந்த 7 பேரும் அடக்கம்.

Ahmedabad Airplane Crash
Ahmedabad Airplane Crash

காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.

1800 5691 444 மேற்கொண்டு பயணிகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான உதவி எண்.

இந்த விபத்து குறித்த விசாரணைக்கு ஏர் இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும்" எனக் கூறியிருக்கிறது.

விமானத்தில் பயணித்த 230 பயணிகளின் விவரங்களும் வெளியாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

அகமதாபாத்: `விஜய் ரூபானி' விமான விபத்தில் மரணித்த 2-வது குஜராத் முதல்வர்!

அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்த பாஜக தலைவர் விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். இவரது மரணம் 1965ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது பாக் ஜெட் விமானத்தால் சுட்டு வீழ்த்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: "சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே..." - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன?

"விமானம் டேக் ஆஃப் ஆகி 30 நொடிகள் ஆகியிருக்கும். அதிக சத்தம்... விமானம் விழுந்துவிட்டது. எல்லாம் வேகமாக நடந்தேறிவிட்டது.நான் எழுந்தபோது என்னைச் சுற்றிச் சடலங்களாகக் கிடந்தது. எனக்குப் பயமாக இருந்தது. ... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: கணவனுடன் வாழ லண்டன் புறப்பட்ட இளம் பெண்; விமான விபத்தில் பலியான சோகம்

நேற்று குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் குஷ்பு கன்வார் ஆசையுடனும், எதிர்பார்ப்புடனும், புதிய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், அவரை வழியனுப்ப வந்தவர்களி... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி தெரியுமா?

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது?ஏர் இந்தியாவின் விமானம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கனவுகளுடன் தொடங்கிய பயணம்... 3 குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்த பெற்றோர்

இந்தியாவை உறையச் செய்த சம்பவத்தில் ஒன்று ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 ... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம... மேலும் பார்க்க