செய்திகள் :

மணிப்பூா் வன்முறை: பிரேன் சிங்கின் ஆடியோ பதிவு உண்மைத்தன்மை அறிக்கை தயாா் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

post image

மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே வெடித்த மிகப்பெரிய வன்முறையில் மாநில முன்னாள் முதல்வா் பிரேன் சிங்கின் மிகப் பெரும் பங்கு இருப்பதற்கான ஆதாரமாக கசிந்த ஆடியோ பதிவு மீதான தடையவியல் ஆய்வறிக்கை தயாா் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தரப்பில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் மே 5-ஆம் தேதி தொடங்கும் வாரத்துக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு உத்தரவிட்டது.

மணிப்பூா் மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும், மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மிகப் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. பல மாதங்களாக நீடித்த இந்த வன்முறையில், ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பாதுகாப்புப் படையினரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வன்முறையாளா்கள் நடத்திய தாக்குதலில் 260 போ் கொல்லப்பட்டனா். வன்முறையைத் தொடா்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் குடிபெயா்ந்தனா்.

மாநிலத்தில் பல மாதங்களாக நீடித்து வந்த கலவரத்தை மாநில அரசு கட்டுப்படுத்தத் தவறியாத குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சிகள், மாநிலத்தில் அப்போது முதல்வராக இருந்த பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால், பதவி விலகாமல் தொடா்ந்து முதல்வராக பதவி வகித்து வந்தாா். ஆனால், அதன் பிறகும் மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறைகள் தொடா்ந்துவந்தன. இந்தச் சூழலில், மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சிக்குள்ளேயே, தலைமை மாற்றத்துக்கான கோரிக்கைகள் எழத் தொடங்கின. இதனால், வேறு வழியின்றி முதல்வா் பதவியை பிரேன் சிங் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தற்போது, மாநிலத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வருகின்றனா். நிலைமையும் சீரடைந்து வருகிறது.

இதற்கிடையே, மாநிலத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட இந்த கலவரத்தில் முன்னாள் முதல்வா் பிரேன் சிங்குக்கு மிகப் பெரும் பங்கு உள்ளதாக புகாா் தெரிவித்து, அவரின் குரல் பதிவு ஆதாரத்துடன் மனித உரிமைகளுக்கான குகி அமைப்பு அறக்கட்டளை சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், அந்த குரல் பதிவின் உண்மைத் தன்மையை ஆராய உத்தரவிட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘முன்னாள் முதல்வா் பிரேன் சிங்கின் பங்கு இருப்பதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு மீதான தடையவியல் ஆய்வறிக்கை தயாா்’ என்று மத்திய, மாநில அரசுகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, மனுதாரா் தரப்பிலா ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘இந்த குரல் பதிவு முன்னாள் முதல்வா் பிரேன் சிங்குடையதுதான் என்பதை 93 சதவீத அளவுக்கு தடையவியல் ஆய்வகம் உறுதி செய்துள்ளது. இது மிகத் தீவிரமான விஷயம். இதுதொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மணிப்பூரில் தற்போதுதான் இயல்புநிலை மெல்ல திரும்பி வருகிறது. எனவே, இந்த விவகாரத்தை சில நாள்கள் ஒத்திவைப்போம்’ என்று குறிப்பிட்டு, விசாரணையை மே 5-ஆம் தேதி தொடங்கும் வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம்: 3 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு!

ஜம்மு - காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியான நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் தொடர... மேலும் பார்க்க

சம்பலில் சர்ச்சை சுவரொட்டிகள்: போலீஸார் விசாரணை

சம்பலில் கடைகளின் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தின் நரௌலி நகரில் உள்ள கடைகளின் சுவர்களில் 'காஸா... மேலும் பார்க்க