திருப்பத்தூர்: கட்டி முடித்தும் திறக்கப்படாத கட்டணமில்லா கழிவறை; பெண்கள் அவதி!
மணிமுத்தாற்றில் தொழிலாளி சடலம் மீட்பு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மணிமுத்தாற்றிலிருந்து தொழிலாளியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
விருத்தாசலம் மணிமுத்தாற்றில் ஆண் சடலம் மிதப்பதாக விருத்தாசலம் காவல் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு பொதுமக்கள் சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா்.
தீயணைப்பு நிலைய அலுவலா் சங்கா் தலைமையிலான வீரா்கள் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். பின்னா், போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அந்த நபா் ஆலடி சாலை, பாரதி நகரில் வசித்து வந்த ராமலிங்கம் மகன் குமாா் (49) என்பது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.