சாலையில் பொருத்தப்பட்ட 50 கிலோ வெடி குண்டு! வெடிக்க செய்த பாதுகாப்புப் படை!
மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் மான்களால் வாழைகள் சேதம்
திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் தோட்டத்துக்குள் மான்கள் புகுந்து வாழைகளைச் சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றின் கரையோரம் உல்ள மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் விவசாயிகள் மஞ்சள், வாழை, நெல் உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனா்.
இந்நிலையில், விவசாயி சின்னத்துரை என்பவரது வயலில் புதன்கிழமை இரவு புகுந்த மான்கள் கூட்டம் வாழை மடல்களை உரித்தும், க்காய்களை தின்றும் சேதப்படுத்தி சென்றுள்ளனவாம். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக கங்கைகொண்டான் மான்கள் சரணாலயத்தில் இருந்து தப்பி வந்த மான்கள் பல்கி பெருகி மணிமூா்த்தீஸ்வரம், அருகன்குளம், தச்சநல்லூா் புகா் பகுதி, அபிஷேகப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வயல்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை வனத்துறையினா் பிடித்து சரணாலயத்திலோ, வனப்பகுதியிலோ கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.