செய்திகள் :

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஒடுக்குபூஜை; நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இங்கு அம்மன் புற்றுவடிவில் காட்சி அருளுகிறார். கடற்கரையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு கேரளாவைச் சேர்ந்த பெண் பக்தர்கள் 41 நாள்கள் விரதம் இருந்து இருமுடி கட்டிவந்து அம்மனை தரிசிப்பார்கள்.

ஒடுக்கு பூஜையை காண மண்டைக்காடு கோயில் வளாகத்தில் திஅண்டிருந்த பக்தர்கள்

இருமுடியில் அம்மனுக்கு பொங்கலிட தேவையான பொருள்களை வைத்திருப்பார்கள். அம்மனை தரிசித்தபின் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபடுகின்றனர். இக்கோயிலில் மாசி கொடைவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை வலியபடுக்கை பூஜைகள் நடைபெற்றன.

10-ம் நாள் விழாவான நேற்று நள்ளிரவு அம்மனுக்கு சோறூட்டும் ஒடுக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்திலும், கோயிலுக்கு முன்பு உள்ள சாலையிலும் திரண்டிருந்தனர். அம்மனுக்கு படைக்கப்படும் உணவு பதார்த்தங்கள் பகவதி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள சாஸ்தா கோயில் வளாகத்தில் தயார் செய்யப்பட்டு பானைகளில் எடுத்துவரப்பட்டன. பானைகளின் மீது நீளமான ஒற்றை வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்தது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்

சாஸ்தா கோயில் வளாகத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி தொடங்கி சுமார் அரை மணி நேரமாக மெதுவாக கோயிலை சென்றடைந்தது. அப்போது அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தாலும் நிசப்தமாக அமைதியாக இருந்தது. இது ஆண்டுதோறும் நடக்கும் அதிசயமாகும். உணவு பதார்த்தங்கள் கோயில் மூலஸ்தானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோயிலில் கொடி இறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு படைக்கப்பட்ட உணவு வகைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா; அம்மனுக்கு சோறூட்டும் ஒடுக்குபூஜை! | Photo Album

ஒடுக்கு பூஜை காண திரண்ட பக்தர்களின் ஒருபகுதிவெள்ளை துணியால் மூடப்பட்டு உணவு பதார்த்தங்கள் எடுத்துச் செல்லப்படும் காட்சிமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா; அம்மனுக்கு சோறூட்டும் ஒடுக்குபூஜை!... மேலும் பார்க்க

Karadaiyan Nonbhu 2025 | யம பயம் நீங்கி தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க அருளும் காரடையான் நோன்பு!

கணவரின் ஆயுள் நீடித்து இனிய இல்லறம் நிலைக்கவும் தீர்க்க சுமங்கலி வரம் பெறவும் வழிபட வேண்டிய காரடையான் நோன்பு எப்போது? வழிபடுவது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் மயிலை கற்பக லட்சுமி சுரேஷ். மேலும் பார்க்க

உசிலம்பட்டி: ஒச்சாண்டம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடந்த மாசிப் பெட்டி எடுப்பு திருவிழா...!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒச்சாண்டம்மன் கோயில் மிகவும் பிரபலமானது. இந்த கோயிலில் மாசி சிவராத்திரி அன்று ஒச்சாண்டம்மன் ஆடை ஆபரணங்கள் அடங்கிய புகழ்பெற்ற மாசி பெ... மேலும் பார்க்க

ஆவேச காளி வேடங்கள்... சிலிர்ப்பை ஏற்படுத்திய ஆங்கார நடனம்! - வேலூர் மயானக்கொள்ளை | Photo Album

மயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ள... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி அன்று செய்யவேண்டியவை; உங்கள் ராசிக்கான வழிபாடு என்ன?

ஓர் ஆண்டில் மிகவும் உன்னதமான நாளாகக் கருதப்படுவது மகா சிவராத்திரி. அந்த நாளில் சிவ வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் சிவ வழிபாடு செய்த பலன் கிடைக்கும். சிவ வழிபாடு செய்யும் அன்பர்களுக்கு நவகிரகங்களும் ... மேலும் பார்க்க

பூம்பாறை குழந்தை வேலப்பர் திருவிழா: பால்குடம், காவடி எடுத்த பக்தர்கள் | Photo Album

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ளது பூம்பாறை. கடவுள் முருகன் குழந்தையாக நடித்து அருணகிரி நாதரைப் பிசாசிடமிருந்து காப்பாற்றினார் எனப் பக்தர்கள் நம்புகிறார்கள். இச்சம்பவத்தால் பூம்பாறை முருகன... மேலும் பார்க்க