இதயம் தொடரின் முதல் பாகம் முடிந்தது! 2ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!
மண்ணுக்குள் புதைந்திருந்த 90 வருட ரேர் விஸ்கி பாட்டில்கள்... வாக்கிங் சென்றபோது கண்டெடுத்த இளைஞர்!
அமெரிக்காவின் ஜெர்சி நகரத்தின் மார்கேட் பியர் கடற்கரையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், சுமார் 90 ஆண்டுகள் பழைமையான விஸ்கி பாட்டில்களைக் கண்டெடுத்துள்ளார்.
ஆஸ்டின் கொன்டெஜியாகோமோ என்ற அந்த நபர், தனது நாயுடன் கடற்கரைக்கு வாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மண்ணில் ஏதோ ஒன்று புதைந்திருப்பதைக் கண்டிருக்கிறார்.
முதலில் அதனை குப்பை என நினைத்த அவர், அதன் பின்னர் பக்கத்தில் சென்று பார்த்தபோது பாட்டில்கள் இருந்துள்ளன.

வெளியே எடுத்து பார்த்த பிறகுதான் தெரிகிறது, அது மிகவும் பழைமையான விஸ்கி பாட்டில்கள் என்று. அப்படி 11 விஸ்கி பாட்டில்களை அவர் கண்டெடுத்துள்ளார்.
அந்த பாட்டில்களில் சீல்கள் பிரிக்கப்படாமல் இருந்துள்ளது. 1930 முதல் 1940களுக்கிடையே தயாரிக்கப்பட்ட Lincoln Inn நிறுவனத்தின் விஸ்கிதான் அவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த தயாரிப்பு கம்பெனி செயல்பாட்டில் இல்லை. 11 விஸ்கி பாட்டில்கள் கடலோரங்களில் எப்படி புதைந்திருக்கும் என்பதற்கு சரியான தகவல்கள் இல்லை. நீண்ட காலத்திற்கு மண்ணில் புதைந்திருந்த இந்த விஸ்கியைக் குடிக்கலாமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.