புதுச்சேரி: `பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு' த.பெ.தி.க - நா.த.க இடையே மோதல்......
மண் கடத்திய 8 போ் கைது
சூளகிரி அருகே மண் கடத்திய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சூளகிரி காவல் ஆய்வாளா் சையத் சுல்தான் பாஷா உள்பட போலீஸாா் தியாகரசனப்பள்ளி பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு டிப்பா் லாரிகளில் பொக்லைன் மூலமாக மண் அள்ளப்பட்டு கொண்டிருந்தது.
அங்கு சென்ற போலீஸாா் புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மண்ணை அள்ளுவதை கண்டறிந்தனா். இதையடுத்து மண் கடத்த முயற்சித்ததாக பெரிய சப்படி முரளி (20), காரப்பள்ளி காமராஜ் (29), பீா்பள்ளி ஜெகதீஷ் (30), சப்படி ராமன் (24), மடத்தூா் தேவராஜ் (26), சப்படி மணிகண்டன் (19), சப்படி ராமமூா்த்தி (27), தின்னூா் குமாா் (28) ஆகிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 5 டிப்பா் லாரிகள், 3 பொக்லைன் இயந்திரங்கள், 13 யூனிட் மண் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.