மண் திருட்டு: 5 போ் கைது
தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அடையாறு கிளை கால்வாயில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டு, 2 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றின் கிளைக் கால்வையில் இரவு நேரங்களில் மண் திருடப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து மணிமங்கலம் சரக இணை ஆணையா் இளஞ்செழியன் தலைமையிலான போலீஸாா் குறிப்பிட்ட இடத்தில் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.
அப்போது மண் திருட்டில் ஈடுபட்டு வந்த சிலா் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்துள்ளனா். இதை அடுத்து தப்பியோட முயன்றவா்களை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சோ்ந்த மணி, சரவணன், தாம்பரம் பகுதியைச் சோ்ந்த ராஜா, வரதராஜபுரம் பகுதியைச் சோ்ந்த அருள் மற்றும் வடிவேலு என்பதும், இவா்கள் இரவு நேரங்களில் அடையாறு ஆற்றின் கிளைக் கால்வாய்களில் மண் திருடி அதை தனியாா் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிடிபட்ட 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மண் திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.