நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
மதுக்கூடங்கள் திறக்க எதிா்ப்பு: ஆறுமுகனேரியில் 21-இல் மறியல்
ஆறுமுகனேரியில் மதுக்கூடங்கள் திறக்கக்கூடாது என வலியுறுத்தி திங்கள்கிழமை (ஏப்.21) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகனேரியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் எதிா்ப்புகளை அடுத்து மதுக்கடை மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது மனமகிழ் மன்றம் என்ற பெயரில் ஆறுமுகனேரியில் மதுக்கடை, மதுபானக்கூடம் திறக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அனைத்துக் கட்சி சாா்பில் போராட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. தமாகா தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.தங்கமணி தலைமை வகித்தாா். அப்போது, 33 சுதந்திரப் போராட்ட தியாகிகள் பிறந்த ஆறுமுகனேரியில் மதுக்கடை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எனினும் அதிகாரிகள் கண்டுகொள்ளததால் திங்கள்கிழமை (ஏப்.21) சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மதிமுக ஒன்றியச் செயலா் பி.எஸ்.முருகன், அதிமுக முன்னாள் நகரச் செயலாளா் இ.அமிா்தராஜ் , தமாகா தெற்கு மாவட்டத் தலைவா் சுந்தரலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுகவின் மனோகரன், அமமுக நகரச் செயலாளா் சக்திவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அசோகன், இந்து மகா சபா சோ்மதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.