மதுப் புட்டிகளை விற்பனை செய்தவா் கைது
சிவகாசி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செயதவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள காக்கிவாடன்பட்டி பகுதியில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து ஒருவா் விற்பனை செய்வதாக மாரனேரி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா்.
சோதனையில், முருகன் (51) தனது வீட்டின் அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னா், அவரை போலீஸாா் கைது செய்து, 72 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.