பாதுகாப்புத் துறை சோதனையில் துப்பாக்கி, நவீன வெடிகுண்டு கைப்பற்றல்!
கல் குவாரிக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
மதுரை-கொல்லம் நான்கு வழிச் சாலைப் பணிக்காக, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நரியன்குளம் கிராமத்தில் கல் குவாரி அமைக்கப்பட்டது. இங்கிருந்து கற்கள், ஜல்லி எடுக்கப்பட்டு நான்கு வழிச் சாலைப் பணிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தக் கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்தப் பகுதி பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தின் போது, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். கல் குவாரியை மூட வேண்டும் எனப் பொதுமக்கள் முழக்கமிட்டனா்.
இவா்களிடம் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா, வட்டாட்சியா் பாலமுருகன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா், இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.