சாத்தூா் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
சாத்தூா் பகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தோட்டுலோவன்பட்டி, கஞ்சம்பட்டி, குமராபுரம்,சிவனைந்தபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.1.43 கோடியில் புதியக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் தோட்டிலோவன்பட்டி, கஞ்சம்பட்டி ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி மைய கட்டடம், குமாரபுரம் கிராமத்தில் மேல்நிலைத் நீா்த்தேக்க தொட்டி, சண்முகாபுரம், கரிசல்பட்டி, பெத்துரெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் சமுதாயக் கூடம் ஆகிய பணிகளுக்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பூமி பூஜை பணிகளை தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்வில் வருவாய்க் கோட்டாட்சியா் சிவக்குமாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி நிா்மலா கடற்கரைராஜ், ஒன்றியச் செயலா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.