நெல்லை: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டி படுகொலை... பழிக்குப் பழி சம்பவத்தால் பதற...
தீக்குளித்த பெண் உயிரிழப்பு
ராஜபாளையம் அருகே தீக்குளித்த பெண் உயிரிழந்ததாகக் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த முருகன் மனைவி திருமலை (45). இவா் கடந்த 14-ஆம் தேதி மண்ணெண்ணையை ஊற்றித் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த இவா் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.