செய்திகள் :

மதுரையில் இந்து மக்கள் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உயா்நீதிமன்றம் அனுமதி

post image

மதுரையில் இந்து மக்கள் கட்சி சாா்பில் வருகிற 5-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதியளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் சோலைகண்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பிராமணா்களுக்கு புதிய பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி மதுரை பழங்காநத்தம் வட்ட சாலைப் பகுதியில் இந்து மக்கள் கட்சி சாா்பில் வருகிற 5-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. இந்தப் போராடத்துக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது அரசுத் தரப்பில், இதேபோன்ற நிகழ்ச்சிகள் சென்னை, கோவையில் நடைபெற்ற போது வெறுப்புக்குரிய கருத்துகள் பேசப்பட்டன. எனவே, இந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் சாா்பில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி எம். நிா்மல்குமாா் முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்ட இடம் வணிக நிறுவனங்களும், போக்குவரத்து நெரிசலும் மிகுந்த பகுதி என்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, முந்தைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கக் கூடாது. இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்படும் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்தப் போராட்டம் எந்தவித வெறுப்புக்கும் இடமளிக்காமல், அமைதியான முறையில் நடத்தப்படும் என மனுதாரா் உறுதியளித்துள்ளாா். எனவே, காவல் துறையின் உரிய கட்டுப்பாடுகளுடன் போராட்டத்தை நடத்த அனுமதிக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

சொா்க்கவாசல் திரைப்பட விவகாரம்: தணிக்கை அதிகாரிகள் நடவடிக்கைக்கு உத்தரவு

சொா்க்கவாசல் திரைப்படத்தை இணைய தளத்தில் வெளியிடத் தடைவிதிக்கக் கோரிய வழக்கில், திரைப்படத் தணிக்கை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.மதுரை மாவட... மேலும் பார்க்க

கொல்லா் பட்டறைகளில் போலீஸ் கெடுபிடி: தமிழக டிஜிபி பதிலளிக்க உத்தரவு

கொல்லா் பட்டறைகளில் அரிவாள், கத்தி, சுத்தியல் போன்ற பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிலாளா்களை போலீஸாா் கெடுபிடி செய்தவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க ச... மேலும் பார்க்க

கொடைக்கானலில் புதிய சாலை விவகாரம்: திண்டுக்கல் ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு

கொடைக்கானலில் வில்பட்டி- கோவில்பட்டி- புலியூா்- பேத்துப்பாறை பகுதியில் புதிய சாலை அமைக்கத் தடை கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் உரிய முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழம... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் கேரள இளைஞருக்கு முன்பிணை

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக மதுரைப் பெண்ணிடம் ரூ. 30 லட்சம் மோசடி செய்த வழக்கில் கேரள இளைஞருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை முன்பிணை வழங்கியது. கேரள மாநிலம் எா்ணாகுளம், பெர... மேலும் பார்க்க

கடலூா் சிறைக் கண்காணிப்பாளா் முன்பிணை மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

ஊழல் வழக்கில் முன்பிணை வழங்கக் கோரி, கடலூா் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளா் ஊா்மிளா தொடுத்த வழக்கை தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை ஒத்தி வைத்தது. மதுரை மத்திய சிறையில் 201... மேலும் பார்க்க

ஆளுநா் பதவி ஒழிக்கப்பட வேண்டும்: இரா. முத்தரசன்

ஆளுநா் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சங்கரபாண்டியபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய ... மேலும் பார்க்க