செய்திகள் :

மதுரையில் கூடிய தொண்டர்கள்: தவெக கட்சியினர் மீது வழக்குப்பதிவு!

post image

தவெக தலைவர் விஜய் வந்தபோது மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் திரண்டது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தவெக தலைவர் விஜய், 'ஜனநாயகன்' படப்பிடிப்பில் பங்கேற்க கொடைக்கானல் செல்வதற்காக கடந்த மே 1 ஆம் தேதி மதுரை விமான நிலையம் வந்தார்.

அன்று மாலைதான் விஜய், விமான நிலையம் வந்த நிலையில் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடினர். படப்பிடிப்புக்குச் செல்வதால் கட்சி சார்பில் யாரும் வரவேண்டாம் என்றும் விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையம் வந்தபின்னர் செய்தியாளர்களுடன் பேசிய விஜய், 'நான் படப்பிடிப்புக்குச் செல்கிறேன், எல்லோரும் வீட்டுக்குச் செல்லுங்கள்' என்றும் கூறியிருந்தார்.

அன்று தொண்டர்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, விமான நிலையத்திற்குள்ளும் பயணிகள் செல்ல சிரமம் இருந்தது. விமான நிலையத்தில் தடுப்புக் கம்பிகள் உள்ளிட்டவை சேதமடைந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக விமான நிலையத்தில் தொண்டர்கள் கூடியதற்கு மதுரை மாவட்டச் செயலாளர்கள் தங்கபாண்டி மற்றும் கல்லணை ஆகியோர் மீது பயணிகளுக்கு தொந்தரவு செய்தல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல், சட்ட விரோதமாக கூடியது என 3 பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விஜய் படப்பிடிப்பு முடிந்து இன்று மதுரை வழியாக சென்னை செல்லவுள்ளார். இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் தொண்டர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தாலியை கழற்றிவிட்டு நீட் தேர்வு எழுதச் சொல்லியதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்: அமைச்சர்

மே 5 வணிகர் நாளாக அறிவிக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மே 5 ஆம் தேதி வணிகர் நாளாக விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வணிகர் சங்க கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் இன்று (மே 5) நடைபெற்றது. இதில், முதல்வர... மேலும் பார்க்க

நம்முடைய களம் பெரிது - பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! - முதல்வர்

நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற “தம... மேலும் பார்க்க

இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அன்பில் மகேஸ்

சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 1,008 சம்ஸ்கிருத உரையாடல் ... மேலும் பார்க்க

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை நீட்டிப்பு!

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் விதித்தத் தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது. கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவு... மேலும் பார்க்க

கோவை - திருப்பூர் எல்லை வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான சுல்தான்பேட்டை அருகே மல்லேகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் வெடிமருந்து ஆலையில் இன்று (மே 5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டைச் சே... மேலும் பார்க்க

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

60 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ள நிலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்... மேலும் பார்க்க