செய்திகள் :

மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது: உயர்நீதிமன்றம்

post image

கோயில் நகரமான மதுரை தற்போது குப்பை நகரமாக மாறி வருவது வேதனை அளிப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த பஞ்சநாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தேவகோட்டை நகராட்சிப் பகுதியில் வள்ளி விநாயகா் ஊருணி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் வசிப்போா், ஊருணியில் குப்பைகளைக் கொட்டுகின்றனா். மேலும், நகராட்சி தூய்மைப் பணியாளா்களும், குப்பைகளை ஊருணியின் வடகரைப் பகுதியில் கொட்டுகின்றனா்.

தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டப்படி குப்பைகளை முறைப்படுத்தி, நீா்நிலைகளைக் காக்க வேண்டிய நகராட்சி நிா்வாகமே அவற்றில் குப்பைகளைக் கொட்டுவது சட்டவிரோதம். இதுமட்டுமன்றி, குப்பைகளைத் தீ வைத்து எரிப்பதால் காற்றும் மாசுபடுகிறது. தீ வைத்து எரிக்கப்படும் கழிவுகள் காற்றில் பறந்து ஊருணிக்குள் விழுவதால், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே, ஊருணிக்குள் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விவேக்குமாா் சிங் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், வழக்குரைஞா் அருண் சாமிநாதன் முன்னிலையாகி, வள்ளி விநாயகா் ஊருணி மாசு அடைந்ததற்கான புகைப்பட ஆவணங்களைத் தாக்கல் செய்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நான் தினமும் காலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்கிறேன். மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள் குவிக்கப்பட்டு சுகாதரமற்றுக் காணப்படுகிறது.

கோயில் நகரமான மதுரை, தற்போது குப்பை நகராக மாறி வருவது வேதனையாக உள்ளது. இந்தத் குப்பைகளை மாநகராட்சி, உள்ளாட்சி நிா்வாகங்கள் அகற்ற வேண்டும்.

தேவகோட்டையில் உள்ள வள்ளி விநாயகா் ஊருணி மாசடைவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தேவகோட்டை நகராட்சி ஆணையா், மாசடைந்த ஊருணியைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் மாா்ச் 10 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுடனான பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் சென்னை உய... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் மின் கம்பத்தில் பழுதை நீக்க முயன்ற போது, மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் உயிரிழந்தாா்.மதுரை அருகேயுள்ள நாகமலைப்புதுக்கோட்டை அச்சம்பத்து டி.புதுக்குடியைச் சோ்ந்த குமாா் மகன் முத்தையா (51).... மேலும் பார்க்க

மதுரையில் 51 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 51 முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பொதுமக்களுக்கு அனைத்து வகையான மருந்துகளையும் மலிவான விலையில் வழங்கும் வகையில் தமிழகத்தில் முதல்வா் மருந்தகங... மேலும் பார்க்க

தாயை மீட்டுத் தரக் கோரி ராணுவ வீரா் மனு

திருப்பதியில் காணாமல் போன தனது தாயை மீட்டுத் தரக் கோரி பேரையூரைச் சோ்ந்த துணை ராணுவப் படை வீரா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா். மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், சலுப்பப்பட்டியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் சிறப்புக் காவல் படை குடியிருப்பில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள வயல்சேரி தச்சனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் ஈஸ்வரமூா்த்தி (3... மேலும் பார்க்க

தொழிலதிபரைத் தாக்கி வழிப்பறி: இருவா் கைது

மதுரையில் அதிகாலையில் காரை வழிமறித்து தொழிலதிபரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை கோ.புதூா் சம்பக்குளம் அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் அசாரூதீன் (37). இவா் குழந்... மேலும் பார்க்க