செய்திகள் :

மதுரை: டூவீலர் சர்வீஸ்; பணம் கேட்ட மெக்கானிக்கை தாக்கிய எஸ்.ஐ! - வீடியோ வெளியானதால் சஸ்பெண்ட்!

post image

டூ வீலரை சர்வீஸ் செய்ததற்கு பணம் கேட்ட மெக்கானிக்கை எஸ்.ஐ தாக்கிய வீடியோ வெளியான நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த சீனிவாசன், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் டூ வீலர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

எஸ்.ஐ அண்ணாதுரை

பாலமேடு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ-யாக பணிபுரிந்து வரும் அண்ணாதுரை, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டியில் பணிபுரிந்த காலத்திலிருந்து சீனிவாசனிடம் தன் டூவீலரை சர்வீஸ் செய்வதும், அதற்கு பணம் கொடுக்காமல் செல்வதுமாக இருந்திருக்கிறார். அந்த வகையில் எஸ்.ஐ அண்ணாதுரை, இதுவரை 8600 ரூபாய் பாக்கி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் தன் டூவீலரை ஆல்டர் செய்து தர வேண்டும் என்று சீனிவாசனிடம் கூற, 'அதற்கு முன்பணமாக 10,000 ரூபாயும், ஏற்கெனவே தர வேண்டிய பாக்கி தொகை 8600 ரூபாயும் கொடுங்கள்' என்று கேட்க, 'முதலில் வேலையைப் பாரு, பின்னால் பார்த்துக்கொள்ளலாம்' என எஸ்.ஐ அண்ணாத்துரை அதிகாரமாக தெரிவித்து சென்றுள்ளார்.

பணம் தராததால் அவருடைய டூ வீலரை பழுது பார்க்காமல் அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறார் சீனிவாசன். அதுகுறித்து கேட்க சீனிவாசனுக்கு போன் செய்தும் எடுக்காததால் ஆத்திரமடைந்த எஸ்.ஐ அண்ணாத்துரை, கடந்த 4 ஆம் தேதி தன்னுடன் முரளி என்ற கான்ஸ்டபிளையும் அழைத்து வந்து 'வண்டியை சரி பண்ணித் தர முடியாதா?'' என அசிங்கமாக திட்டியபடி சீனிவாசனையும், அங்கிருந்த ஊழியரையும் கன்னத்தில் அறைந்து கடுமையாக தாக்கியுள்ளார். சீனிவாசனை தன் காரில் ஏற்றி கஞ்சா வழக்கு போட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

மெக்கானிக்கை தாக்கும் எஸ்.ஐ

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாக தற்போது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளுடன் மதுரை எஸ்பி,  மற்றும் முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் அனுப்பியவர், தன்னை தாக்கிய எஸ் ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை கலெக்டரிடம் புகார் அளித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், "வாடிப்பட்டியில் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வரும் நிலையில் பணம் கொடுக்காமல் டூவீலரை ரிப்பேர் செய்து தர வேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார். இந்த நிலையில் பணம் இல்லாததால் சர்வீஸ் செய்யாமல் இருந்த என்னையும், ஊழியரையும் எஸ்.ஐ அண்ணாதுரையும் அவருடன் வந்த காவலர் முரளி இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கினார்கள். பின்பு அவர்களது வாகனத்தில் ஏற்றிச் சென்று கஞ்சா வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டினார்கள்" என கண்ணீருடன் தெரிவித்தார்.

இப்புகார் தென் மண்டல ஐ.ஜி-யின் கவனத்துக்கு சென்று எஸ்.ஐ அண்ணாதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Boby Chemmanur: நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகாரில் போபி செம்மண்ணூர் கைது; அடுத்த நடவடிக்கை என்ன?

கேரளாவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஹனி ரோஸ். இவர் நகைக்கடை திறப்பு விழாவுக்குச் சென்றபோது தொழில் அதிபர் போபி செம்மண்ணூர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த சில நாட்களாகக் குற்றம்சாட்டி வருகிறார்.தொழில் அ... மேலும் பார்க்க

வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு... திமுக ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 4 பேர் மீது `குண்டாஸ்’

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட கீழ்ஆலத்தூர், நாகல் கிராமம் சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்தவர் விட்டல் குமார் (47).பா.ஜ.க ஆன்மிகப் பிரிவின் வேலூர் மாவட்டச் செயலாளராகப் பொற... மேலும் பார்க்க

பாலியல் ரீதியாக கொடுமைபடுத்திய தந்தை; எரித்துக் கொன்ற 'மகள்கள்' - பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தங்களது தந்தையை எரித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. லாகூரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகல் சோக் என்ற இடத்தி... மேலும் பார்க்க

ராஜபாளையம்: 'என் தற்கொலைக்கு காரணம் போலீஸ்'- கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த மாற்றுத்திறனாளி

மது விற்கச் சொல்லி தொந்தரவு அளித்ததாலும், தகாத வார்த்தைகளால் போலீஸ் திட்டியதாலும் மனம் உடைந்து தற்கொலை செய்வதாக மாற்றுத்திறனாளி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், ராஜபாளைய... மேலும் பார்க்க

சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இன்ஸ்பெக்டர், அதிமுக பிரமுகர் சிக்கிய பின்னணி!

சென்னை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக... அவரின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அப்போது அங... மேலும் பார்க்க

மாளிகை கடை டு போதைப் பொருள் கடத்தல்; தனி சாம்ராஜ்யம் - யார் இந்த செந்தில்?

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு சில தினங்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவின் இன்ஸ... மேலும் பார்க்க