சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!
மதுரை: UPSC / TNPSC குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம்.!
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் யூ.பி.எஸ்.சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் மதுரையில் நடைபெறவுள்ளது.

வருகின்ற மார்ச் 23 ஆம் தேதி (ஞாயிறு) மதுரை அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் ஆனந்த விகடன், கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகடாமி நிறுவனத்துடன் இணைந்து 'UPSC/TNPSC I,II தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி?' என்ற இலவச பயிற்சி முகாமினை நடத்துகிறது.
ஆனந்த விகடன், கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவச பயிற்சி முகாமினை பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் மார்ச் 23 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வருமான வரித்துறை ஆணையர் வி.நந்தகுமார் ஐ.ஆர்.எஸ், மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆர்.டி. ஷாலினி ஆகியோரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குரூப் தேர்வுகள் குறித்த தங்களுடைய அனுபவங்களையும் ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்கள். இவர்களுடன் கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குனர் சத்யஶ்ரீ பூமிநாதனும் சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.