செய்திகள் :

மது அருந்திவிட்டு இளையராஜா போட்ட ஆட்டம்... ரஜினி பேச்சால் கலகலப்பு!

post image

இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வைரலாகியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் நேற்று (செப்.13) பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

நிகழ்வில் இளையராஜா பேசிக்கொண்டிருந்தபோது திடீரென இருக்கையிலிருந்து எழுந்துவந்த நடிகர் ரஜினிகாந்த், “ஜானி படப்பிடிப்பின்போது விஜிபியில் நான் தங்கியிருந்தேன். படப்பிடிப்பு முடிந்த இரவில் இயக்குநர் மகேந்திரனும் நானும் மது அருந்திக்கொண்டிருந்தோம். அப்போது, இளையராஜா வந்தார். குடிக்கிறீங்களா? எனக் கேட்டோம். சரி என்றதும், பியர் பாட்டலை கொடுத்தோம்.

அரை பியரை அடித்துவிட்டு அன்று இளையராஜா போட்ட ஆட்டமிருக்கிறதே... ஐய்யய்யோ... பலரின் கிசுகிசுக்களைக் கேட்டார். முக்கியமாக, நடிகைகளைப் பற்றி.. அண்ணனுக்கு (இளையராஜா) பெரிய காதல் இருந்தது. அதனால்தான், இப்படியான பாடல்கள் கிடைத்தன. ராஜாவைப் பற்றி பேச இன்னும் நிறைய இருக்கிறது. இன்னொரு சந்தர்பத்தில் சொல்கிறேன்” என்றார்.

ரஜினி பேசப்பேச அரங்கிலிருந்தவர்கள் கைதட்டி உற்சாகமடைந்தனர். பின், இளையராஜா, ‘இதுதான் வாய்ப்பு என இல்லாததையும் சொல்கிறார்’ என சிரித்துக்கொண்டே சொன்னார்.

இதையும் படிக்க: ஏ. ஆர். ரஹ்மான் வந்தாலும்... இளையராஜாவைப் புகழ்ந்த ரஜினி!

actor rajinikanth spokes about his memories with ilaiyaraaja

மார்ஷல் படப்பிடிப்பு எப்போது?

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள மார்ஷல் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்... மேலும் பார்க்க

ஹாங் காங் ஓபன்: இறுதிப் போட்டியில் சாத்விக் - சிராக் தோல்வி!

ஹாங் காங் ஓபன் இறுதிப் போட்டியில் இந்தியர்கள் சாத்விக் - சிராக் இணையர்கள் தோல்வியுற்றனர். இந்த சீசனில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த இவர்கள் தோல்வியைச் சந்தித்தது இந்திய ரசிகர்களுக்க... மேலும் பார்க்க

கைவிடப்படும் லோகேஷ் - ஆமிர் கான் திரைப்படம்?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - ஆமிர் கான் திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம், லியோ திரைப்படங்களுக்குப் பின் இந்தியளவில் கவனிக்கும் இயக்குநராக உருவெடுத்த... மேலும் பார்க்க

பிக் பாஸ் - 9 ஒளிபரப்பு தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் வ... மேலும் பார்க்க

மலைவாசிகள் குற்றவாளிகளா? தண்டகாரண்யம் டிரைலர்!

பா. இரஞ்சித் தயாரிப்பில் உருவான தண்டகாரண்யம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். நீண்ட நாள்கள... மேலும் பார்க்க

உலக தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு ஏமாற்றம்!

ஜப்பானில் உலக தடகள சாம்பியன்ஷிப் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்தியா்கள் பதக்க வாய்ப்பு பெறாமல் ஏமாற்றத்தை சந்தித்தனா்.ஆடவருக்கான 35 கிலோ மீட்டா் நடைப் பந்தயத்தில் சந்தீப்குமாா் 2 மணி ந... மேலும் பார்க்க