செய்திகள் :

மத்தியப் பிரதேசத்தில் 3 பெண் நக்சல்கள் சுட்டுக் கொலை!

post image

மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பெண் நக்சல்கள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாலகாட் மாவட்டத்தில் ம.பி., சத்தீஸ்கர் எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சல் தடுப்புப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இன்று நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுடன் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க | பாகிஸ்தானில் பஞ்சாப் பயணிகள் சுட்டுக்கொலை! என்ன நடந்தது?

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சுப்கர் வனப்பகுதியில் உள்ள ரோண்டா வன முகாம் அருகே பெண் நக்சல்கள் 3 பேர் நக்சல் தடுப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.

நக்சல்கள் கொல்லப்பட்ட இடத்திலிருந்து ரைஃபிள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நக்சல்கள் சிலர் தப்பித்துச் சென்றதாகவும் அவர்களைத் தேடி 12 காவல்துறை குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க

மணிப்பூரில் 17 தீவிரவாதிகள் கைது

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 17 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக மாநில காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: விஷ்ணுபூா... மேலும் பார்க்க

எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு, போதைப் பொருள் கடத்தல்: பாகிஸ்தானிடம் இந்திய ராணுவம் கடும் எதிா்ப்பு

எல்லை தாண்டி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை கடும் எதிா்ப்புத் தெரிவித்தது. ஜம்மு-காஷ்மீர... மேலும் பார்க்க