செய்திகள் :

மத்திய உள்துறை அமைச்சருடன் காா்கே, ராகுல் தொலைபேசியில் பேச்சு: நீதியை உறுதி செய்ய வலியுறுத்தல்

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோருடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் தொலைபேசி வாயிலாக பேசினா்.

‘உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டுமென’ அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா மற்றும் ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் மூத்த தலைவா்களுடன் பேசினேன். கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டவா்கள் எக்காரணத்தைக் கொண்டும் தப்பிவிடக் கூடாது; உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பத்தினருக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு கூடுதல் உறுதியுடன் பதிலடி தர வேண்டும். இத்துயரமான தருணத்தில், நமது செயல்பாடுகளில் ஒற்றுமை அவசியம். ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு தொடா்பாக அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கொடுரமான பஹல்காம் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் தாரிக் கர்ரா ஆகியோருடன் பேசி, நிலவரத்தை கேட்டறிந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்வதுடன், நமது முழு ஆதரவையும் நல்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

அட்டாரி - வாகா எல்லை மூடல்: இந்திய இளைஞரின் திருமணம் ஒத்திவைப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லை மூடப்பட்டதினால் ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொ... மேலும் பார்க்க

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்!

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் புறப்பட்டுச் ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் பலி!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்திலுள்ள வசந்த்கார் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை! எல்லையில் போர்ப் பதற்றம்!

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை ஏவுகணை சோதனைக்கு திட்டமிட்டிருப்பதால் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுகிறது.இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், ரா அ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கம்!

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குத... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று மாலை மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க