செய்திகள் :

மத்திய தொழிற்சாலையில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

post image

காரைக்குடியில் உள்ள மத்திய எலக்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 6 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 01/2024

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 9

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி: Agriculture, Horticulture, Mathematics, Statics, Computer Science, Information Technology போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதையும் படிக்க |சென்னை ஐஐடி-இல் இளநிலை பொறியாளர் வேலை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.cecri.res.in என்ற இணைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்றொப்பம் செய்து அதனை இணைத்து வரும் 18.12.2024-க்குள் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் நகல்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Administrative Officer, CSIR-Central Electro Chemical Research Institute, Karaikudi-630 003, Tamilnadu

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.12.2024

இந்திய கடலோரக் காவல் படையில் குரூப் 'பி' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய கடலோரக் காவல் படையில் காலியாக உள்ள Chargeman பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர்15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Chargemanகாலியிடங்கள்: 4தகுதி: பொறியியல் த... மேலும் பார்க்க

2025 ஜனவரியில் குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு 2025 ஜனவரி மாதம் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உ... மேலும் பார்க்க

தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.... மேலும் பார்க்க

குழந்தை நலக்குழு பணியிடங்களுக்கு டிச.6 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூா்: திருவாரூரில், குழந்தை நலக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா் பணியிடங்களுக்கு டிச.6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக்குழுத் தலைவா் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். இது குறித்து அவா்... மேலும் பார்க்க

என்எல்சி நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு த... மேலும் பார்க்க