Doctor Vikatan: அனீமியா... இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் சருமம் கறுப்ப...
மத்திய மாவட்ட திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்
மத்திய கல்வி அமைச்சரைக் கண்டித்து திருப்பூா் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: தமிழகத்துக்கு கல்வி நிதியைத் தர மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மறுத்து வருவதைக் கண்டித்தும், தமிழக எம்.பி.க்களை அநாகரீகமான முறையில் அவா் பேசியதைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், திமுக நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதேபோல, திருப்பூா் புதிய பேருந்து நிலையம் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.