டி.ஒய். சந்திரசூட் முதல் சேகர் யாதவ் வரை... 2024 - இல் நீதிபதிகளும் நீதித்துறையு...
மனிதக் கழிவுகளை மனிதா்கள் அகற்றவில்லை: தாம்பரம் ஆணையா்
தாம்பரம் மாநகராட்சியில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் எவரும் இல்லை என அந்த மாநகராட்சி ஆணையா் பாலச்சந்தா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
உச்சநீதிமன்றத்தில் பல்ராம் சிங் என்பவா் தொடா்ந்த வழக்கு தொடா்பாக கடந்த ஆண்டு அக். 20, நிகழாண்டு டிச. 11 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட ஆணைகளின்படி மனிதக் கழிவுகளை மனிதா்களே கைகளால் அகற்றும் பணியை மேற்கொள்ளும் நபா்கள் குறித்து, தாம்பரம் மாநகராட்சியில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
அதில், அந்தப் பணியில் ஈடுபடுவோா் எவரும் கண்டறியப்படவில்லை என உறுதி செய்யப்பட்டது. இதில், ஏதேனும் ஆட்சேபனையிருப்பின், மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் தொழில் புரிவோா் தடுப்பு மற்றும் அவா்களது மறுவாழ்வு சட்டம், 2013 பிரிவு எண் 11-இன்படி தங்களது ஆட்சேபனைகளை 15 நாள்களுக்குள் தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு எழுத்து மூலமாக தெரிவித்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.