Viduthalai 2: "மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறன்..." - தனுஷ் சொல்லியதென்ன?
மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது இல்லை?
ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பெயர் இந்தாண்டுக்கான கேல் ரத்னா விருதுப் பட்டியலில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டுதோறும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டின் உயரிய கேல் ரத்னா விருது வழங்கப்படும்.
அந்த வகையில், இந்தாண்டும் கேல் ரத்னா விருதுக்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
மனு பாக்கரின் பெயர் இல்லை?
இந்தாண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய துப்பாக்கிச் சூடு வீராங்கனை மனு பாக்கர், இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார்.
ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற இந்தியர் என்ற வரலாற்றையும் படைத்தார்.
இவர், சமீபத்தில் தான் கேல் ரத்னா விருதுக்கு தகுதியானவரா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பினார். பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து, அந்த பதிவை நீக்கினார்.
இந்த நிலையில், கேல் ரத்னா விருதுக்கான இறுதிப் பட்டியலில் மனு பாக்கர் பெயர் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவர், மனு பாக்கர் விருதுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்த தகவலை மறுத்துள்ள மனு பாக்கரின் நெருங்கிய உறவினர், அவர் விருதுக்காக விண்ணப்பித்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் ரூ. 82,000 உதவித் தொகை பெறுவது எப்படி?
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட மனு பாக்கர், துப்பாக்கிக் கோளாறு காரணத்தால் பதக்க வாய்ப்பை இழந்தார். இதனைத் தொடர்ந்து, காமல்வெல்த் மற்றும் ஆசியக் கோப்பை தொடர்களில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
2018 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட 16 வயதான மனு பாக்கர், வெற்றி பெற்று இளம் சாம்பியனானது குறிப்பிடத்தக்கது.