நீதிபதியை பதவிநீக்கம் செய்வதற்கான நடைமுறைகள் என்னென்ன? முழு விவரம்!
மனைப்பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
மதுராந்தகம் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி இருளா் மக்களுக்கு மனைப் பட்டா கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வீட்டு மனைப் பட்டா இல்லாமல் இருப்பதால், அரசின் நலத்திட்ட உதவிகளையும், மின் இணைப்பு பெற முடியாாமலும் இருந்து வருகின்றனா். மதுராந்தகம் வட்டாட்சியா், கோட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை..
இந்நிலையில், தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கத்தின் சாா்பாக மதுராந்தகம் பஜாா் வீதியில் காந்தி சிலை பகுதியில் இருந்து ஊா்வலமாக சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நிகழ்வில், மாநில பொதுச் செயலா் இரா.சரவணன், மாவட்ட செயலா் கே.வாசுதேவன், திஎன் டிஏ ஜி.மோகனன், வட்ட செயலா் எஸ்.ராஜா, ஒன்றிய செயலர அா்ஜூன் குமாா், மாவட்ட துணை தலைவா் பி.மாசிலாமணி, விவசாய சங்க மாவட்ட துணை தலைவா் ஜி.மோகனன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னா் வருவாய் கோட்டாட்சியா் ரம்யாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். மதுராந்தகம் வட்டத்தில் வீட்டுமனை கோரி 213 மனுக்கள் வரப்பட்டு உரிய விசாரணைகளுக்கு பின் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. அதில் 153 தொகுப்பு வீடுகளுடன் மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தீா்வு காணப்படும் என அவா்களிடம் கோட்டாட்சியா் ரம்யா தெரிவித்தாா். பின்னா் அவா்கள் அனைவரும் கலைந்துச் சென்றனா்.