குஜராத்தில் உருவானது வாக்குத்திருட்டு; 2014-ல் தேசிய அளவில் பரவியது: ராகுல் காந்...
மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவனுக்கு ஜாமீன் நிராகரிப்பு!
மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவனுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கட்டிய மனைவியை துப்பாக்கியால் சுட்டதை நியாயப்படுத்துவதற்காக எந்தக் காரணத்தை கணவன் விளக்கினாலும் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாதென தில்லி உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
கடந்த 2018-இல், தில்லியிலுள்ள ஒரு மருத்துவமனை வெளியே குடும்பத் தகராறில் தன்னுடன் இணக்கமாக வர மறுத்த மனைவியின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்ட கணவன் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனு இன்று(ஆக. 26) தில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனு மீதான விசாரணையில், அந்த நபர் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு அந்தப் பெண்னை சுட்டதாக வாதிடப்பட்டது. அந்தப் பெண்ணை கொல்லும் உள்நோக்கத்துடன் செயல்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனை நிராகரித்து வாதிட்ட அந்தப் பெண்னின் தரப்பு, அந்த நபர் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியது. உரிமமின்றி அவர் துப்பாக்கி வாங்கி பயன்படுத்தியதையும் சாட்சியங்களுடன் விளக்கியது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கை விசாரிக்கும் கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் இதுவரை கடந்த 6 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அந்த நபர் மீதான விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும் அறிவுறுத்தியது.