வாகன விற்பனை நிலையங்களில் பிரதமர் மோடி படம்? காங்கிரஸ் விமர்சனம்!
மனைவி, கள்ளக் காதலன் தலையினை வெட்டிக் கொலை செய்த கணவர்!
கள்ளக்குறிச்சி: மலைக்கோட்டாலம் கிராமத்தில் மனைவி மற்றொறுவருடன் தனிமையில் இருந்ததைப் பார்த்த கணவர் கொடுவாளால் இருவரது தலையை வெட்டி பையில் எடுத்துக் கொண்டு வேலூர் மத்திய சிறையின் முன்பாக நின்று கொண்டிருந்தவரை, வேலூர் காவல் நிலையத்தில் காவலர்கள் வியாழக்கிழமை ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் கொளஞ்சி (60). இவரது இரண்டாவது மனைவி லட்சுமி (42). தம்பதிகளுக்கு 3 பெண் பிள்ளைகள் இருப்பதாக தெரிகின்றது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் உள்ளதாக கணவருக்கு தெரியவந்ததையொட்டி, மனைவியைக் கண்டித்தாராம்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு லட்சுமி, அவரது வீட்டு மொட்டைமாடியில் அதே ஊரைச் சேர்ந்த கந்தன் மகன் தங்கராசு (62) உடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை அறிந்த அவரது கணவர் கொடுவாளால் இருவரது தலையையும் துண்டாக வெட்டிவிட்டாராம். இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
தகவலறிந்த கிராம மக்கள் வியாழக்கிழமை காலை லட்சுமியின் வீட்டு மாடிக்கு சென்று பார்த்தபோது உடன் இருந்தவர் யார் என்று தெரியவில்லையாம். பின்னர் அவரது சடலத்தின் அருகே செல்லிடைபேசி கிடந்துள்ளதாம். அதனை பார்த்ததும் தங்கராசு எனத் தெரிந்து கொண்டனராம்.
உடனே வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தி.சரவணன், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் செ.தங்கவேல், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ம.ராபின்ஸன் மற்றும் போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
இருவரின் சடலத்தையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொளஞ்சியை தேடிப்பார்த்துள்ளனர். எங்கேயும் கிடைக்கவில்லையாம்.
உடனே விரல்ரேகை நிபுனர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டனர். விரல்ரேகை நிபுனர் தடயங்களை சேகரித்தார். மோப்பநாய் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் மலைக்கோட்டாலம் குவாரி அருகே சென்று நின்றுவிட்டதாம்.
கொளஞ்சி இருவரது தலையையும் பையில் எடுத்துக்கொண்டு, இன்று(செப். 11) காலை வேலூர் மத்திய சிறையின் முன்பாக நின்று கொண்டிருந்துள்ளார். அங்கு பணியில் இருந்த காவலர்கள் பார்த்து வேலூர் பாகாயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் காவலர்கள் பாகாயம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
பின்னர், வேலூர் போலீஸார் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் தியாகதுருகம் காவல் ஆய்வாளர் மலர்விழி, கச்சிராயபாளையம் காவல் உதவி ஆய்வாளர் ரா.ஆனந்தராசு மற்றும் போலீஸார் வேலூருக்கு விரைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: