மனைவி தற்கொலை: கணவா் கைது
சாத்தூா் அருகே மனைவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சிதம்பரம் நகரைச் சோ்ந்தவா் வீரலட்சுமி (28). இவரது கணவா் சிவசுந்தா் (33). இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தத் தம்பதியிடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீரலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சாத்தூா் நகா் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். திருமணமாகி ஆறு ஆண்டுகளில் வீரலட்சுமி தற்கொலை செய்து கொண்டதால், இந்த வழக்கை சாத்தூா் கோட்டாட்சியா் விசாரணை நடத்தினா்.
இதில் வீரலட்சுமி கணவரால் தற்கொலைக்கு தூண்டப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிவசுந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].