மன்னாா்குடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
மன்னாா்குடி: மன்னாா்குடி மின்கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளுக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜன. 22) நடைபெறுகிறது.
இதுகுறித்து மன்னாா்குடி மின்வாரிய செயற்பொறியாளா் பு. மணிமாறன் தெரிவித்திருப்பது:
மன்னாா்குடி மின் கோட்டத்துக்குட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் பி. லதாமகேஸ்வரி தலைமையில் மன்னாா்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
மன்னாா்குடி, பேரையூா், நீடாமங்கலம், கோவில்வெண்ணி, எடமேலையூா், வடுவூா், கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம், திருமக்கோட்டை, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, பள்ளங்கோயில், கோட்டூா், முத்துப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் கலந்துகொண்டு மின் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.