செய்திகள் :

மன்மோகன் சிங் மறைவு: தில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

post image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி புறப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார்.

தில்லியில் உள்ள இல்லத்தில் மன்மோகன் சிங்கின் உடல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக சனிக்கிழமை காலை மன்மோகன் சிங்கின் உடல் வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மன்மோகன் சிங்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி புறப்பட்டுள்ளார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது:

‘முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவால் மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். அன்னாரது அறிவாற்றலும், தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார மாற்றத்தை வழிநடத்திச் சென்றது. அன்னாரது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையில் நிலையான வளர்ச்சி, சமூக மேம்பாடு, சீர்திருத்தங்களைக் கொண்டு வரப்பட்டது’ எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘கருணாநிதி, டாக்டர் மன்மோகன் சிங்குடன் இணைந்து செயல்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பும், அவர்களது கூட்டணியும் மிகப் பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தின. தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதிசெய்தார். நெருக்கடியான காலங்களிலும் டாக்டர் மன்மோகன் சிங்கும் கருணாநிதியும் உறுதியாக ஒன்றிணைந்து நின்று, நம்பிக்கை மற்றும் மாநில அடையாளங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணி அரசின் வலிமையை வெளிப்படுத்தினர்.

அவரது அமைதியான, ஆழ்ந்த சிந்தனை கொண்ட தலைமைப்பண்பானது பொதுவாழ்வில் காண்பதற்கு மிகவும் அரிதான பண்பாகும். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் மிகுதியாகச் சாதித்தார். அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார். பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார். நமது தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்த்து வைத்த அவரது செயல்பாடு இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்காற்றுவதற்குத் துணைபுரிந்தது. பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிகவும் அடக்கத்துடன் அவர் இருந்தார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையால் சுற்றுலா தளமான ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் சனிக்கிழமை குவிந்தனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு உள்ளது. இங்கு சேலம் மாவட்டம், மட்டும... மேலும் பார்க்க

டிச.31-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, ... மேலும் பார்க்க

Untitled Dec 28, 2024 04:16 pm

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு ... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த நன்மைகள்: பட்டியலிட்ட ஆ.ராசா

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கிடைத்தவைகள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் எம்பியுமான ஆ. ராசா பட்டியலிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலையில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் ரவி!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது... மேலும் பார்க்க

'மண்ணைவிட்டு மறைந்தாலும் நம் நெஞ்சங்களில் வாழும் நண்பர் விஜயகாந்த்' - முதல்வர் பதிவு!

விஜயகாந்த் நினைவு நாளையொட்டி அவரை நினைவுகூர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அத... மேலும் பார்க்க