செய்திகள் :

மமிதா பைஜூ பிறந்தநாளில் புதிய பட போஸ்டர்!

post image

நடிகை மமிதா பைஜூ பிறந்தநாளில் டூட் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை மமிதா பைஜூ. பின்னர், ரெபல் எனும் தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார்.

விஜய்யின் ஜனநாயன படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் நடிக்கும் அவரது 4-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியது.

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.

டூட் (dude) எனப் பெயரிட்டுள்ள இந்தப் படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், மமிதா பைஜூ பிறந்தநாளில் டூட் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. அதில், “பிறந்தநாள் வாழ்த்துகள் குறள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில், குறள் கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடித்துள்ள உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - புகைப்படங்கள்

இஸ்ரேலின் டெல் அவிவில், ஈரானிலிருந்து நேரடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பணிபுரியும் மீட்புப் மற்றும் பாதுகாப்புப் படையினர்.ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்யும் இஸ்ரேலிய வீர... மேலும் பார்க்க

ஜன நாயகன் கடைசி படமா? விஜய்யின் பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் விஜய் தனது கடைசி படம் இதுதானா? என்பது குறித்து நடிகையிடம் பதிலளித்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் கட்சியைத் தொடங்கியதால் இனிமேல் விஜய் நடிக்கமாட்டார் என தகவல்கள் வ... மேலும் பார்க்க

ஜன நாயகன் புதிய போஸ்டர்! இயக்குநர் வினோத்தா? அட்லியா?

நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ நள்ளிரவு 12 மணியளவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது... மேலும் பார்க்க