செய்திகள் :

``ஏமாற்று மாடல்; தமிழகம் பின்னடைவு.. பி.டி.ஆர் சொன்னதே சான்று'' - எடப்பாடி பழனிசாமி சாடல்

post image

தமிழ்நாட்டில் அந்நிய முதலீடுகள் மிகவும் மெதுவாக நடந்து வருகிறது என்று தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்; ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில் குறையும் முதலீடுகள்; விளம்பர வெற்றிகளில் மிதக்கும், நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ் நாடு “நம்பர் ஒன்” மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் உங்கள் குடும்ப ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) 2024-25 நிதியாண்டு தரவுகள் அம்பலப்படுத்துகின்றன.

ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டை ஈர்க்கிறேன்' என்று பொம்மை முதலமைச்சர் 2022-ல் துபாய் மற்றும் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று ஈர்த்த முதலீடுகள் என்ன?

லூலூ மால், நோபுள் ஸ்டீல் என தொடக்கமே ஏமாற்று மாடல்தான்.. 2023-ல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகள், 2024 பிப்ரவரியில் ஸ்பெயின், 2024 செப்டம்பரில் அமெரிக்கா சுற்றுப் பயணம் என்று விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு?

விடியா திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.

நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் சாதனை.

திமுக
திமுக

இந்தச் சாதனையை பல கோடி அரசு செலவில் விளம்பரப்படுத்துவது வேதனை. இரு நாள்களுக்கு முன்பு விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசும்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுவே, பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் ஆட்சியில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்பதற்கு சான்று.

இந்தக் கொடுமையை அனுபவிக்கும் தமிழக மக்கள், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்டாலின் திமுக-விற்கு 'தோல்வி'யை பரிசளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்துவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

``உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்..'' - முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு

"பசும்பொன் முத்துராமலிங்க தேவர், முருகன் அவதாரத்தில் வாழ்ந்து மறைந்தார், அவரை தாழ்ந்து பணிந்து வணங்குகிறேன்..." என்று ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பரபரப்பாக பேசியுள்ளார்.பவன் கல்யாண்பெரு... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் எதற்காக இரண்டு சட்டங்கள்?'' - முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை கேள்வி

மதுரை பாண்டி கோவில் அம்மா திடலில் 'முருக பக்தர்கள் மாநாடு' நடந்து வருகிறது. பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் இந்த மாநாடு சுமார் 3 மணிக்கு தொடங்கியது. மேலும், இந்த மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், பிற மாந... மேலும் பார்க்க

``அதனால் தான், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது..'' - பவன் கல்யாண் சொன்ன காரணம்

'முருக பக்தர்கள் மாநாடு' - மதுரை பாண்டி கோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளி... மேலும் பார்க்க

``அமெரிக்காவின் செயலை ஐ.நா உடனடியாக கண்டிக்க வேண்டும்..'' - ஈரான் கடும் எதிர்ப்பு

நேற்று இரவு, அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி திட்டப் பகுதிகளைத் தாக்கியுள்ளது. இது இஸ்ரேலுக்கு ஆதரவான செயலாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ள... மேலும் பார்க்க

US attacks on iran: ஈரான் மீதான தாக்குதல்; ரஷ்யா, சீனா சொல்வதென்ன.. உலக நாடுகள் யார் பக்கம்?

நேற்று இரவு, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இஸ்ரேல் வாழ்த்து கூறினாலும், பிற நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. எந்தெந்த நாடுகள் என்ன கூறியுள்ளன என்பதைப் பார்க்கலாம். ரஷ... மேலும் பார்க்க

US attacks on iran: ``சக்திவாய்ந்த தலைவர்; இஸ்ரேலின் சிறந்த நண்பர்'' - ட்ரம்ப்பை புகழ்ந்த நெதன்யாகு

நேற்று இரவு, ஈரானின் மூன்று அணுசக்தி திட்டப் பகுதிகளில் அமெரிக்கா தாக்குதலைத் நடத்தியது. முன்னர், ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலில், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணையுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அமெரிக்க அதி... மேலும் பார்க்க