செய்திகள் :

மயோனைஸ் வடிவில் விஷம்.. தடை விதிக்கும் அளவுக்கு ஆபத்தா?

post image

அசைவப் பிரியர்களோ, சைவப் பிரியர்களோ, மயோனைஸ் பிரியர்கள் ஏராளம். அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தமிழகத்தில் மயோனைஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு பர்கராக இருக்கட்டும், சிக்கன் 65 ஆக இருக்கட்டும் அதன் ருசியை அதிக ருசியாக்குவது இந்த மயோனைஸ்தான். பலரும் கூடுதலாக மயோனைஸ் கேட்டு, அதற்கு தனியா பில் போடப்படும் என்று சொன்னாலும் கூட, கொண்டுவரச்சொல்லி சாப்பிட்டு மகிழ்ந்துவந்த மயோனைஸ் பின்னணியில் இத்தனை ஆபத்துகள் இருக்கிறதா? தடை விதிக்கும் அளவுக்கு என்றுதான் பலரும் ஆச்சரியப்பட்டிருப்பார்கள் தடை விதிக்கப்பட்ட செய்தியை அறிந்து.

உண்மையில் மயோனைஸ் செய்வது மிகவும் எளிது, ஒரு மிக்ஸியில் பச்சை முட்டையை உடைத்து ஊற்றி அதில் ஒரு கப் ரீஃபைன்டு எண்ணெய் ஊற்றி, மிக்ஸியை சுழற்றினால் ஒரு நொடியில் தயாராகிவிடும் இது. ஆனால், இதனால் உடலுக்கு ஏற்படும் தீங்குகளோ பல காலம் ஆகும் சரியாக என்கிறார்கள் மருத்துவர்கள்.

வேகவைக்கப்படாத முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் பல நாள்கள் வரை வைத்திருந்து சாப்பிடும்போது அதனால், உடலில் பல மோசமான கிருமித் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறதாம்.

ஒருவேளை நாள்பட்ட மையோனைஸ் சாப்பிடும்போது, அதிலிருக்கும் கிருமிகள், உடலில் பல்கிப்பெருகி பெரும் ஆபத்தை விளைவிக்கலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

அது மட்டுமல்ல,

மயோனைஸ் சாப்பிட்டதும் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதையே நாள்தோறும் சாப்பிடும்போது நீரிழிவு ஏற்படவும், நீரிழிவு நோயாளியாக இருப்பின் இது உடல்நிலையை மிக மோசமாக பாதிக்கவும் அபாயம் இருக்கிறது.

உடல் எடை

அதிக மையோனைஸ் சாப்பிடுபவர்களின் உடல் எடை கடுமையாக அதிகரிக்குமாம்.மையோனைஸில் அதிகக் கலோரிகள் இருக்கிறதாம். கொழுப்பும் அதிகம் இருக்கிறது. இதனால் உடல் எடை குறிப்பாக தொப்பை அதிகரிக்கும்.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் பிரச்னை இருப்பவர்கள் மயோனைஸ் சாப்பிடுவது ஆபத்து. சூடுபடுத்தப்படாத பச்சை எண்ணெய் பயன்படுத்தப்படுவதால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதய நோய் அபாயம்

ஒரு டேபிள்ஸ்பூன் மையோனைஸில் 1.6 கிராம் கொழுப்பு இருக்கிறது என்றும், இதனால் உடலில் கொழுப்பு அதிகரித்து அது இதய நோய்க்கு வழிவகுத்துவிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

பீனிக்ஸ் - வீழான் படத்தின் முக்கிய அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் அறிமுகமாகும் பீனிக்ஸ் - வீழான் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி, மகாராஜா திரைபடத்தில்... மேலும் பார்க்க

படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்கள்: கேங்கர்ஸ் படக்குழு வெளியிட்ட விடியோ!

கேங்கர்ஸ் படக்குழு படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்களை ஸ்பாட்லைட் எனும் விடியோவாக வெளியிட்டுள்ளது. மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.முழுநீ... மேலும் பார்க்க

சிக்ஸ் பேக் சர்ச்சைக்கு பதிலளித்த விஷால்..! சூர்யா அல்ல, தனுஷ்தான் முதல்முறை!

சூர்யாவுக்கு முன்பாகவே நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் வைத்ததாக நடிகர் விஷால் பதிலளித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ரெட்ரோ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். காதல் கலந்த ஆக்‌ஷன் படமா... மேலும் பார்க்க

ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக ஃபஹத் ஃபாசில்?

நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் ஃபஹத் ஃபாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஜினிகாந்த் நடிப்பில் 2023-இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது ஜெயிலர் திரைப்படம். இப்படத்தை இயக்குநர... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் இரண்டாவது பாகம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.அரவிந்த் ... மேலும் பார்க்க