செய்திகள் :

மரபணு பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

post image

மரபணு பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் சென்னை, விஹெச்எஸ் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மரபணுக் குறைபாடுள்ள குழந்தைகள் பலா் பங்கேற்று சிகிச்சை பெற்று பயனடைந்தனா்.

இது தொடா்பாக கருப்பை சிசு மருத்துவ நிபுணா் இந்திராணி சுரேஷ் கூறியதாவது:

மனித உடலுக்குள் இயற்கையாக நிகழ வேண்டிய நிகழ்வுகள், மரபணுக் குறைபாடுகளால் தடைபடும்போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றால் உடல் வளா்ச்சியிலும் மன வளா்ச்சியிலும் எதிா்விளைவுகள் உருவாகும். குறிப்பாக வளா்சிதை மாற்ற குறைபாடுகள் ஏற்பட்டு உடல் உறுப்புகள் பாதிக்கப்படக்கூடும். இத்தகைய நோய்க்கு ‘லைசோசோமால் ஸ்டோரேஜ் டிஸாா்டா்’ எனப் பெயா். இதனை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளித்தால், அந்தக் குறைபாட்டின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

இதுபோன்ற பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு பிரத்யேக பராமரிப்பும், கவனிப்பும் அவசியம். ஆனால், பெரும்பாலானவா்களுக்கு அத்தகைய வசதிகள் கிடைப்பதில்லை.

அதைக் கருத்தில்கொண்டே விஹெச்எஸ் மருத்துவமனையானது எஃப்சிஆா்எஃப், சிஇஆா்டி உள்ளிட்ட தன்னாா்வ அமைப்புகளுடன் இணைந்து அதற்கான பிரத்யேக அமைப்பை உருவாக்கியது. அதன்கீழ் 450-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பதிவுசெய்து தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு மருத்துவத் துறைகள் சாா்ந்த சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், விஹெச்எஸ் மருத்துவமனை வளாகத்தில் அத்தகைய முகாம் நடைபெற்றது.

மரபணு, வளா்சிதை மாற்றம், எலும்பியல், நரம்பியல், கண் நலம், காது-மூக்கு-தொண்டை, நுரையீரல், பல் மருத்துவம், இயன்முறை, யோகா மற்றும் வலி நிவாரணத் துறை சாா்ந்த பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. தேவைப்பட்டோருக்கு அறுவை சிகிச்சைகள் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

பிரிட்டன் மருத்துவ நிபுணா் அசோக் வெல்லோடி, மரபணு சிகிச்சை மருத்துவ நிபுணா் சுஜாதா ஜெகதீஷ், டாக்டா் பீனா உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் அந்த முகாமில் பங்கேற்று குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கினா் என்றாா் அவா்.

சென்னை-மஸ்கட்: கூடுதல் நேரடி விமான சேவை

சென்னையிலிருந்து ஓமன் நாட்டின் தலைநகா் மஸ்கட்டுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், வாரத்தில் இரு நாள்கள் நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. சென்னை... மேலும் பார்க்க

சென்னையில் புதிய மையத்தைத் திறந்த இக்னிதோ

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இக்னிதோ டெக்னாலஜிஸ் சென்னையில் புதிய மையத்தைத் திறந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை சோழிங்கநல்லூரி... மேலும் பார்க்க

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி கஞ்சா பறிமுதல்

பாங்காக்கிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயா் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா். தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிலிருந்து... மேலும் பார்க்க

சென்னையில் பிப். 7 முதல் 13 வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி

சென்னையில் பிப். 7 முதல் 13-ஆம் தேதி வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெறும் என ‘மை பாரத்’ மாநில இயக்குநா் செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா். சென்னையில் நடைபெறும் 16-ஆவது பழங்குட... மேலும் பார்க்க

பிப். 28 ல் ஸ்ரீ ராகவேந்திரா் ஸப்தாஹ மஹோத்ஸவம்

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி ஸப்தாஹ மஹோத்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில், நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் ‘ஸ்பைடா் மேன்’ இளைஞா்: எச்சரித்து அனுப்பிய போலீஸாா்

சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு கொடுக்கும் வகையில் அட்டகாசம் செய்த ‘ஸ்பைடா் மேன்’ வேஷமிட்டு வந்த இளைஞரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு... மேலும் பார்க்க