செய்திகள் :

`மராத்தியில பேசமாட்டாயா?' - `எக்ஸ்கியூஸ்மி வழிவிடுங்க' என ஆங்கிலத்தில் பேசிய பெண்களுக்கு அடிஉதை

post image

மகாராஷ்டிராவில் சமீபத்தில் மராத்தி புத்தாண்டான குடிபாட்வா தினத்தன்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, `அலுவலகங்களில் பயன்பாட்டு மொழி மராத்தியாக இருக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து புனே அருகில் உள்ள லோனவாலாவில் மகாராஷ்டிரா வங்கிக்கு சென்ற நவநிர்மான் சேனா தொண்டர்கள், வங்கியில் அனைவரும் மராத்தியில் பேசவேண்டும் என்று மேலாளரிடம் மனு கொடுத்தனர்.

அந்நேரம் அங்கு வந்த மற்றொரு வங்கி ஊழியர், `இந்தி பேசுவதால் வங்கியின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதில்லை’ என்று தெரிவித்தார். இதனால் அந்த ஊழியரை நவநிர்மான் சேனாவினர் அடித்து வங்கி மேலாளர் அறையில் இருந்து வெளியில் தூக்கி போட்டனர். மாநிலம் முழுவதும் ஆங்காங்கே ராஜ் தாக்கரே கட்சியினர் மராத்தியில் பேசவேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

தாக்கப்படும் பெண்கள்

`மராத்தியில் பேசமாட்டாயா?'

இந்நிலையில் மும்பையின் புறநகர் பகுதியாக விளங்கும் டோம்பிவலியில் மராத்தி பேசாத பெண்கள் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர். டோம்பிவலி மேற்கு பகுதியில் உள்ள பழைய டோம்பிவலியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் வழியில் நின்ற சிலரிடம் `எக்ஸ்கியூஸ்மி வழிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர்.

உடனே, `மகாராஷ்டிராவில் இருந்து கொண்டு எப்படி ஆங்கிலத்தில் பேசலாம்?’ என்று கூறி வழியை மறித்துக்கொண்டு நின்றவர்கள் அப்பெண்களிடம் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இரண்டு பெண்களையும் அவர்கள் அடித்தனர்.

அப்பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முயன்றனர். இந்த நிகழ்வு முழுக்க வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பரவி இருக்கிறது. இது குறித்து இரு பெண்களும் விஷ்னுநகர் போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை அந்தேரி பவாயில் உள்ள எல் அண்ட் டி கம்பெனி கேட்டில் பணியில் நின்றிருந்த வடமாநில வாட்ச்மென் ஒருவர் மராத்தி பேச தெரியாமல், மராத்தியை அவமதிக்கும் வகையில் பேசிவிட்டார். இதனால் நவநிர்மான் சேனாவினர் அந்த வாட்ச்மெனை அடித்து உதைத்தனர். வாட்ச்மென் மன்னித்துவிடுங்கள் என்று கூறியபடி கையெடுத்து கும்பிட்ட படி நின்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மராத்திக்கு ஆதரவான செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும்படி தனது கட்சியினரை ராஜ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க