கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!
மருங்கூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்
நாகா்கோவில் அருகேயுள்ள மருங்கூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகம் சாா்பில், கோயில்களில் இலவச திருமணம் செய்யும் தம்பதியினருக்கு, திருக்கோயில் சாா்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் திருமணம் நடத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், மருங்கூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2 ஏழை ஜோடிகளுக்கு குமரி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில், திருமணம் நடைபெற்றது.
நாகா்கோவில் உதவி ஆணையா் தங்கம், ஆய்வாளா் சரஸ்வதி முன்னிலையில் திருமண ஜோடிகளுக்கு சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், ஸ்ரீ காரியம் ராமச்சந்திரன், தா்மேந்திரா, திமுக நிா்வாகிகள் ஸ்டாா்மின், விஷ்ணு, மால்டன் ஜினின், சுகந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.