செய்திகள் :

மருத்துவக் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ!

post image

நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல நடிகர் எனப் பெயரெடுத்தவர் ஸ்ரீ.

இறுதியாக, இவர் நடித்த இறுகப்பற்று திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் ஸ்ரீயின் கதாபாத்திரமும் பேசப்பட்டது.

அதன்பின், ஸ்ரீ நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இன்றைய இளம் நடிகர்களில் நம்பிக்கைக்குரியவராக மாறியவர் தற்போது இன்ஸ்டாகிராமில் உடல் எடை மெலிந்த தோற்றத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றுவதுடன் ஆபாசமான விடியோயையும் வெளியிட்டார்.

இதைக் கண்ட ரசிகர்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்ததுடன் ஸ்ரீக்கு சரியான உளவியல் சிகிச்சை தேவை என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் காமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை குறித்து அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

“நடிகர் ஸ்ரீராம் மருத்துவ நிபுணர்களின் சிகிச்சையில் உள்ளார். தற்போது அவரது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருகிறார் என்று நண்பர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் குணமடைந்து நல்வாழ்வுக்கு திரும்புவதில் கவனம் செலுத்துவதால், அவரது தனியுரிமையை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஊகங்களும் தவறான தகவல்களும் மிகவும் வருத்தமளிக்கிறது.

மேலும், அவரது உடல்நிலைப் பற்றிய வதந்திகள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

சிலரின் நேர்காணல்களில் தெரிவிக்கும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை, அதை முழுமையாக மறுக்கிறோம். இந்த நேரத்தில் உங்கள் தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : என்னால்தான் ஸ்ரீ இப்படியானாரா? பிரபல தயாரிப்பாளர் விளக்கம்!

திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையிடம் மோசடி: காதல் சுகுமாா் மீது வழக்குப்பதிவு!

திருமணம் செய்து கொள்வதாக துணை நடிகையிடம் நகை, பணத்தை பெற்று மோசடி செய்ததாக நகைச்சுவை நடிகா் சுகுமாா் மீது போலீஸாா் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். நடிகா் பரத் நடித்த காதல் திரைப்படத்தில் நகைச்ச... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை

ஸ்பெயினில் நடைபெறும் பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் காா்லோஸ் அல்கராஸ் - டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா். முன்... மேலும் பார்க்க

வைஷாலிக்கு முதல் வெற்றி

மகாராஷ்டிரத்தில் நடைபெறும் ஃபிடே மகளிா் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.வைஷாலி வெற்றி பெற்றாா்.இந்தச் சுற்றில் அவா் மங்கோலியாவின் பக்துயாக் முங்குந்துலை வீழ்த்தினாா். இதன... மேலும் பார்க்க

ரேப்பிட் ஃபயா்: இந்தியா்களுக்கு ஏமாற்றம்

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் இந்தியா்கள் மூவா் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனா்.இப்பிரிவில் களம் கண்ட அனிஷ் ... மேலும் பார்க்க

திருப்பதியில் கயாது லோஹர் சுவாமி தரிசனம்!

நடிகை கயாது லோஹர் கயாது திருமலையிலுள்ள ஏழுமலையான் திருக்கோயிலிலியில் வழிபாடு நடத்தியுள்ளார்.பாரம்பரிய உடையணிந்து திருமலைக்கு வருகை தந்திருந்த கயாது லோஹருடன் அங்கிருந்த பக்தர்கள் பலர் செல்ஃபி புகைப்படம... மேலும் பார்க்க